கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
Passport
By Raghav
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை மூன்று தினங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்றைய தினம் (10.04.2025) தெரிவித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களம்
அதன்படி எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கான துண்டு சீட்டுகள் குறித்த நாட்களில் நண்பகல் 12 மணிவரை வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி