யாழ் மாவட்ட மக்களுக்கு அவரச அறிவிப்பு - அலட்சியம் வேண்டாம்!
பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் போது தலைக்கவசம் அணியாது ஏற்றிச் செல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ஆளுநரின் செயலகத்தில் நேற்றையதினம் (20.1.2025) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உட்பட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்கின்றனர் என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விபத்துகளில் மாணவர்கள் பாதிப்பு
குறிப்பாக மருத்துவர்களால் இந்த விடயம் அதிகளவில் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தலைக்கவசம் அணியாது பயணிப்பதால் விபத்துகளில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் தலைக்கவசம் அணியாது பயணிக்கும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும்.
மாணவர்களை அவ்வாறு பாதுகாப்பான முறையில் ஏற்றிச் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் அதனை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஆளுநருக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 23 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்