OL பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த விடயம் கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம்
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

