யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணம் - பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர்
இதற்கமைய விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்கவின் 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என ஆளுநர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் - சென்னை (Chennai) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் (Alliance Air) விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது யாழ்ப்பாணம் - சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு விமான சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |