பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய கந்தையா பாஸ்கரன்(படங்கள்)
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஆசிரியர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.பி.சி. தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார்.
பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் இன்று(8) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பரிசில் வழங்கல்
பரிசளிப்பு விழாவில் ஐ.பி.சி. தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பாடசாலையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இதன்போது உரையாற்றிய ஐ.பி.சி. தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன், பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதனை அதிகரிக்க அதிபர் ஆசிரியர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.
கலைத் திறன்களுக்கு பாராட்டு
அங்கு கல்வி கற்றும் மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய அவர், அதனை மேலும் வளர்க்கும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.