அமைச்சின் செயலராக மற்றுமொரு படைத்தளபதிக்கும் வழங்கப்பட்டது நியமனம்(photo)
srilanka
army
appointment
By Sumithiran
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ இன்று (8) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் இன்று பிற்பகல் அரச தலைவர் செயலகத்தில் வைத்து கையளித்ததாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் திஸாநாயக்க வனவிலங்கு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களின் செயலர்களாக ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி