மற்றுமொருவரும் ஆபத்தான நிலையில்
Janatha Vimukthi Peramuna
SL Protest
Death
By Sumithiran
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த திகதியில் நடத்துமாறுகோரி, தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணியின் மீது காவல்துறையினர் நடத்திய கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் சிக்கி 29 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) மரணமடைந்தார்.
ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
எஞ்சியுள்ள 28 பேரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறுகின்றனர்.
அவர்களில் ஒருவரின்
நிலைமை கவலைக்கிடமாக
இருக்கிறது என,
கொழும்பில் (27)
நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பின்போது,
ஜே.வி.பியின் பொதுச்
செயலாளர் டில்வின் சில்வா
தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி