மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Public Utilities Commission of Sri Lanka
By Sathangani
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மின் விநியோகப் பாதையில் சீரமைப்பு
கடந்த சனிக்கிழமை (09) மாலை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த மின் விநியோகப் பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
ஆனால் அந்த பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஆபத்தானது என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி