ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்! கைப்பற்றப்பட்ட செங்கடலின் மற்றுமொரு நகரம்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, உலகின் 10 முதல் 12 சதவீத கடல்வழி வர்த்தகம் நடைபெறும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டாப் கடல்வழிப் பாதையின் இருபுறங்களையும் ஹூதிகளால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சூழ்நிலையின் காரணமாக, செங்கடலில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது.
முன்னதாக செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர்.
இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.