மற்றுமொரு ரஷ்ய இராணுவ விமானம் வீழ்ந்தது - விமான ஓட்டிகளும் பலி
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகோய் சு-30 போர் விமானம் சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் உள்ள இரண்டு மாடி வீட்டில் விழுந்ததாக பிராந்திய ஆளுநர் இகோர் கோப்ஸேவ் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
தான் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டதாகவும், ஆனால் குடியிருப்பாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆளுநர் கூறினார்.
சோதனை ஓட்டத்தில் இருந்த விமானமே விபத்து
ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜெட் விமானம் கீழே விழுந்தபோது சோதனை ஓட்டத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது.
விழுந்து நொறுங்குவதற்கு முன்பு விமானம் கிட்டத்தட்ட செங்குத்தாக டைவிங் செய்து, அடர்த்தியான கரும் புகையை வானில் அனுப்பியது சமூக ஊடகங்களில் காணப்பட்டது. மற்றொரு வீடியோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்யாவின் அரச விசாரணைக் குழு, விமானப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு நாட்களுக்கு முன்னரும் வீழ்ந்து நொருங்கிய விமானம்
இதேவேளை கடந்த ஆறு நாட்களுக்கு முன்னரும் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 3 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய விபத்தில் சிக்கிய இதே ரக இராணுவ விமானமே கடந்த ஆறு நாட்களுக்கு முன்னரும் விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.