தென்னிலங்கையில் இன்றிரவு மீண்டும் துப்பாக்கிசூடு - ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலபிட்டிய வைத்தியசாலைக்கு எதிரில் இந்த சம்பவம் இன்றிரவு இடம்றெ்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று பதிவான இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
இதேவேளை இன்று பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி காரில் பயணித்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரும் சுடப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.