கோட்டாபய வெளியிட்டுள்ள மற்றுமொரு விசேட வர்த்தமானி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்படி இன்று மாலை 6.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை, பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்பு செயலாளர்களின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு இடங்கள், மைதானங்கள், புகையிரத நிலையங்கள், கடற்கரையோரங்களில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதனை தடை செய்து இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அமைதியை பாதுகாத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 16வது சரத்தின் கீழ் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணிவரை ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

