சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Colombo
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sumithiran
அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள்
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் 2021 ஆம் ஆண்டுக்கான அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் அது பிற்போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில்
சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எனவே பரீட்சை பெறுபேறுகள் வெளிவர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் தர்மசேன தெரிவித்தார்.

