விஜேதேச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்சவின் இல்லத்திற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று இரவு (28) சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அக்குழுவினர் சென்றுள்ளனர்.
இருப்பினும், அவர்கள் அங்கு சென்றடைவதற்குள், ரகித ராஜபக்சவும் அவரது சாரதியும் தங்களது கைபேசிகளை அணைத்துவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
தொடர்புகொள்ள முடியவில்லை
ரகிதவின் தந்தை விஜயதாச ராஜபக்சவும், தனக்கு அறிமுகமான பலரைத் தொலைபேசியில் அழைத்துத் தன் மகனைக் கண்டுபிடிக்க முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் கும்பல் ஒன்றிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2025 ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |