சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய சட்டத்தின் பின்னணியில் ஐ.எம்.எஃப் - கேள்வியெழுப்பிய நளின்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றே தான் கருதுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக இவ்வாறு செயற்படுவது குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை திவாலாக்கிய ராஜபக்சக்கள்
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தனது தேவைக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்ற விதிகளை கொண்டு வருகின்றது.
அதுமட்டுமன்றி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் நாட்டை திவாலாக்கியது மட்டுமல்லாது, ஊழல்வாதிகளால் சூழப்பட்டுள்ள அரசாங்கமே தற்போது காணப்படுகின்றது.
இவ்வாறு நாட்டை திவாலாக்கி, அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் ராஜபக்சர்களே” என்றும் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
