இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka ITAK
By Sathangani Nov 25, 2024 10:57 AM GMT
Report

இலங்கையின் இனப்பிரச்சினை சம்மந்தமாகவும் அதற்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார தனது சிம்மாசன உரையில் பேசவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் இன்று (25.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற முதலாவது அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது சிம்மாசன பிரசங்க உரையை நிகழ்த்தி இருந்தார்.

ஈபிடிபியிலிருந்து வெளியேறினார் முன்னாள் எம்.பி திலீபன்

ஈபிடிபியிலிருந்து வெளியேறினார் முன்னாள் எம்.பி திலீபன்

ஜனாதிபதி சுட்டிக்காட்டவில்லை

அந்த உரையின்போது ஜனாதிபதி கூறிய முற்போக்கான கருத்துக்களை பொதுவாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். வரவேற்கின்றோம் இருந்த போதிலும் அங்கு காணப்பட்ட குறைபாட்டை குறிப்பிட்டாக வேண்டும்.

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சினை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது, என்பது தொடர்பில் ஜனாதிபதி அந்த இடத்தில் சுட்டிக்காட்டி இருக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம் | Anura Didnt Talk About Solution Of Ethnic Problem

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக தந்தை செல்வநாயகம் 30 ஆண்டுகள் அறவழிப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார். அதனை அடுத்து போராளிகள் ஏறத்தாள 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதும் பின்னர் 2009க்கு பிற்பட்ட காலத்தில் இராஜதந்திர வழியில் அதனை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல நடத்தப்பட்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

தேசிய மக்கள் சக்தி

இவ்வாறு இருந்தும் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள தலைவர்கள் எடுக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம் | Anura Didnt Talk About Solution Of Ethnic Problem

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கட்சி, போன்ற கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றன. இருந்த போதிலும் அண்மையில் ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றோம் என சொல்கின்றார்கள். 

ஆகவே தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை பற்றி எதுவும் பேசாதது தமிழர்களை பொறுத்தவரையிலும், தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையிலும் தமிழ் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையிலும், ஒரு ஏமாற்றத்தை தருகின்ற விடயமாக அமைந்திருக்கின்றது.

எனவே மாற்றத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினை நியாயமான வழியில் தீர்க்கப்பட வேண்டும். வட கிழக்கிலே  தமிழ் பேசுகின்ற மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி கிடைக்க வேண்டும். சமஸ்ட்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும்.

முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஆடிப்போன புதிய கைத்தொழில் அமைச்சர்

முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஆடிப்போன புதிய கைத்தொழில் அமைச்சர்

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை

காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். அதாவது அவர்களுக்குரிய நீதி பரிகாரம் கிடைக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் போது ஒரு இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஒரு சாட்சியம் அளித்து இருக்கின்றார். மோசமான மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதி பேசவில்லை.

எனவே ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நியாயமான ஒரு தீர்வு அல்லது நியாயமான நீதி பரிகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பனவே ஆகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம் | Anura Didnt Talk About Solution Of Ethnic Problem

வடக்கு கிழக்கிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக ஆயுதம் போராடிய போராளிகள் விடயத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒத்து உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அவர்களுடைய எளிமையான போக்குகள் ஆடம்பரமற்ற ஆட்சி முறை, ஆடம்பரமற்ற நிகழ்வுகள், என்பன மக்களுக்கு கவர்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தீர்வு என்கின்ற விடயம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

தமிழர்களை பாதிக்கக்கூடிய ஆட்சி முறைகள்

அந்த தீர்வு என்பது ஒற்றை ஆட்சி முறைகள் அற்ப சொற்பமான அதிகாரங்களை கொடுத்து அவற்றை அவ்வாறே கட்டுப்படுத்தி விடுவதாக அமையக்கூடாது. சமத்துவமான உரிமைகளை கொடுத்து ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களே ஆட்சி செய்யலாம் அதுதான் தீர்வாக இருக்கலாம் என அவர்கள் நினைக்கலாம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம் | Anura Didnt Talk About Solution Of Ethnic Problem

ஆனால் அரசியல் யாப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு நியாயமாக வரையறுக்கப்படாது விட்டால் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது இனவாத சக்திகள் தென்னிலங்கையில் காணப்படுகின்ற அடிப்படை வாதிகள் ஆட்சியை கைப்பற்றுகின்ற போது மீண்டும் தமிழர்களை பாதிக்கக்கூடிய விதத்தில் அவர்களுடைய ஆட்சி முறைகளைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

எனவே இந்த நாட்டின் பல்லின சமூகம் பல் மதங்களைக் கொண்ட பண்பாடுகளை உடைய மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழ்வதாக இருந்தால் தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.“ என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கஜேந்திரகுமார் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021