லோயரை குறிவைத்த பாதாள டுமீலால் கொழும்பு அதகளங்கள்! அநுர அவசர பாதுகாப்பு கூட்டம்
தமிழர்களின் அரசியல் பரப்பில் ஈயத்தை பார்த்து பித்தளை ஈயென இளித்தாம் என்ற பாணிக்கதைகள் தொடர்கின்றன. ஒருகாலத்தில் சிறிலங்கா அதிரடிப்படையான பாதுகாப்புடன் உலாவந்தவர்கள் இப்போது பாட்டுவாய்த்தால் கிழவி பாடுவதுபோல புதிய பாட்டுக்களை பாடுகிறார்கள்.
அந்தவகையில் முன்னைய சகபாடி சிறீதரன் சிறிலங்காவின் இராணுமயமாக்கலை ஆதரிக்கும் வகையில் அதன் அரசியலமைப்புப் பேரவைக்குள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எட்டுத் தடவைகள் வாக்களித்ததால் அவரிடம் இருந்து கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியை பறித்தது சரியே என அரசியல் பசூக்கா அடிகளை அடிக்கத் தலைப்படுகின்றார்கள்.
இவ்வாறான நகர்வுகளில் அடடே ஆச்சரியம் ரகங்களும் வருகின்றன ஒருகாலத்தில் தன்னை கொலைசெய்ய முன்னாள் போராளிகள் முயன்றாதாக குற்றஞ்சாட்டி அதன் அடிப்படையில் சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தால் சில தமிழ் இளையோர்களையும் தீண்டவைத்த முகங்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட முன்னாள் போராளிகளுடன் கலந்துரையாடியதாக சொல்லிக்கொள்கின்றனர்.
தமிழர்களின் அரசியல் பரப்பில் இவ்வாறு அரசியல் அதகளங்கள் நகர சிறிலங்காவின் பாதுகாப்பு தலைமையகத்துக்கு 500 மீற்றர் தூரத்தில் வைத்து நேற்று முன்தினம் பட்டப்பகலில் ஒரு சட்டவாளரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் தெற்கை உலுப்பின் பின்னணியில் இன்றைய இந்திய பாகிஸ்தான் ரி- 20 போட்டியின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அவரச ஆய்வுகளை செய்த நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
மஹா சிவராத்திரி 2026 நேரலை
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 9 மணி நேரம் முன்