சிறுபான்மையினரை புறக்கணிக்குமா அநுர தரப்பு - விடுக்கப்படும் எச்சரிக்கை
அரசியல் ரீதியாக நாட்டின் சிறுபான்மையின மக்கள், இனம், மதம், மொழி சார்ந்த பிரநிதிகளை புறந்தள்ளி கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில், அதனை மறந்து தற்போதைய ஆட்சியாளர்கள் செயற்படுவார்களாக இருந்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொழும்பு பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி எச்சரித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
“பல்லிண சமூகத்தினர் வாழ்ந்து வரும் நாட்டில் முக்கியத்துவமான விவகாரங்களை கையாளும் போது, அந்தந்த இனக்குழுமங்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உரிய பிரதிநிதித்துவத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
அதனை செய்யாமல் தொடர்ச்சியாக பிழைகளை விட்டுக் கொண்டு சென்றால், அவர்கள் எந்த சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்றார்களோ அந்த சமூகத்தினாலேயே புறக்கணிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஆகவே ஒரு நாட்டை பொறுத்த வரையில் மிக உயர் பதவிகளில் இருப்பவர்கள் நாட்டு மக்களுடைய நாடி துடிப்புகளை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும்”
தொடர்ந்தும் விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தியின் கருத்துக்கள் கீழுள்ள காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |