அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகும் இனப்படுகொலைக்கான பொறுப்புகூறல்
இனப்படுகொலை உட்பட எந்தவொரு சர்வதேச விசாரணைகளுக்கும் அநுர அரசின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அநுர அரசினால் பாதுகாப்பு விடயங்களில் சர்வதேச நாடுகளுடன் ஒத்துபோக வாய்ப்பிருந்தாலும் இன்ப்படுகொலை மற்றும் பொருப்புகூறல் என்பவை தொடர்பில் அழுத்தங்கள் கொடுக்க வாய்ப்பில்லை.
இதனால், பாரிய இழப்பை தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுரவின் தற்போதைய ஆட்சி காலம், எதிர்நோக்கப்போகும் பொருளாதார நெருக்கடி, இலங்கையின் ஆட்சி மாற்றம் சர்வதேசத்தோடு நகரும் விதம், சர்வதேசத்தின் இலங்கை மீதான தாக்கம், தமிழ் இனப்படுகொலைக்கான தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |