சிறிலங்காவின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸாநாயக்க : லால் காந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிச்சயமாக அதிபராக வரவுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைப்பதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. திரு.லால் காந்த தெரிவித்தார்.
கண்டி கரலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
‘திசைகாட்டி’ வெற்றி பெறும்
“இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் ‘திசைகாட்டி’ வெற்றி பெறும் என்பதை அனைத்து ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன.
‘திசைகாட்டி’ வெற்றி பெறும் என்ற அச்சத்தில் உள்ளூராட்சித் தேர்தலை இந்த அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வருட அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என்பதில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் உள்ளது. ஓரளவுக்கு வாக்குப்பதிவு இருக்காது என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.
ஆனால், தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதே ரணிலின் வேலை. இந்த நாட்டை வைத்து 75 ஆண்டுகளாக மாறி மாறி சாப்பிட்டது.
ஒரு திவாலான நாடு
உலகத்தின் முன் சிறிலங்கா ஒரு திவாலான நாடு என்பதை அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், திசைகாட்டியினால் அதிபர் தெரிவு செய்யப்படுவார்.
அடுத்த ஏழு மாதங்களுக்கு இடைவெளி இல்லை. ஒவ்வொருவரும் தினமும் உழைக்க வேண்டும்.
நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் முதல் அறிவிப்பு. எனவே, பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |