போர் வெற்றியை புறக்கணித்து மௌனத்தில் ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளில் சிறிலங்காவின் போர் வெற்றியின் 16 வது ஆண்டு நிறைவு குறித்து எந்த பதிவையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த செயற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி அநுர நாளை (19) நடைபெறும் தேசிய போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.
எதிர்ப்பு
எனினும், ஜனாதிபதி அநுர இந்த நினைவேந்தலில் பங்கேற்க மாட்டார் என முன்னர் செய்தி வெளியாகியதை தொடர்ந்து, அரசியல் தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
சிறிலங்காவின் போர் வெற்றிக்குப் பிறகு இந்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் போர் வீரர்கள் நினைவேந்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, நினைந்தல் நிகழ்விலும் கலந்து கொள்வர்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இவ்வாறான செயற்பாடு பெரும்பான்மை மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை எழுப்பும் வகையில் காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
You may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
