தையிட்டி தொடர்பில் அநுரவின் மாறுபட்ட கருத்து! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியாரின் உரிமைக் காணிகளை பறித்து கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரரை தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வழமைப்போன்று நாளை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சட்டப்பூர்வமானதா விகாரை
“குறிப்பாக தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரை சட்டப்பூர்வமானது என்ற கோணத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விகாரை சட்டப்பூர்வமானது என்றும், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினர் இனவாதிகள் என்றும் ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
இங்கு உண்மையை திரிபுபடுத்தி ஜனாதிபதி கூறுவது தமிழ் மக்களை புறக்கணிப்பதோடு, தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கா பக்கசார்பாக செயற்படுவதை எடுத்துக்காட்டுகிறது” என்றும் குற்றம் சுமத்தியள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்