யாழில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டம் : சுமந்திரன் கடும் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (10) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் பிரசார கூட்டம் குறித்து இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் பிரசார கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் பொதுமக்களை கொண்டு வந்தார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (11) சுமந்திரனின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பயணச் செலவு குறைவு
அத்துடன் ஜனாதிபதி அநுர ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து அவர்களுடன் பேசினார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
For some strange reason President @anuradisanayake brought a few thousand people in buses last evening all the way to Jaffna and spoke to them here, when he could’ve gone to their own districts and addressed them there. Travel cost would’ve been much less 😃 pic.twitter.com/eoX5VKb8mt
— M A Sumanthiran (@MASumanthiran) November 11, 2024
அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிற்கு சென்று ஜனாதிபதி அவர்களுடன் உரையாடியிருக்கலாம் அதனால் பயணச் செலவும் குறைவாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கும் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டதாக சுமந்திரன் மற்றுமொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Stranger still, Sinhala people were given a translation of his speech in Tamil 🤔
— M A Sumanthiran (@MASumanthiran) November 11, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |