லொஹான் ரத்வத்தவின் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) தாக்கல் செய்திருந்த பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்றையதினம் (11.11.2024) நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பானை அனுப்புமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்
மிரிஹான (Mirihana) பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கண்டி (Kandy) – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு (Colombo) அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |