5 மணிநேர வாக்குமூலம்...! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து சிறிது நேரத்திற்கு முன்பு வெளியேறி உள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் FCIDக்க வருகைத்தந்திருந்தார்.
குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆதரவாளர்களும் கூடியுள்ளனர்.





முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தம்மால் வர முடியாது
எவ்வாறாயினும், அன்றைய தினம் தம்மால் வர முடியாது எனவும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்குமாறும் தனது சட்டத்தரணி ஊடாக அவர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும், ஷிராந்தி ராஜபக்சவை இன்றைய தினமே மீண்டும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவைஇ இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 8 மணி நேரம் முன்