அமைச்சின் வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட அர்ச்சுனா..! 1000 ரூபாயால் தீர்ந்த முறுகல்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூச்சல் குழுப்பத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள குறித்த வளாகத்தில் நேற்று (2.01.2026) அர்ச்சுனா எம்.பி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் கத்தி கூச்சலிட்டு அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வாகனத்தில் வந்த எம்.பி, வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்துவதற்கான இடமிருக்கவில்லை.
கோபமடைந்த அர்ச்சுனா எம்.பி
ஆதலால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரை கட்டிடத்தின் அருகே இறங்கி வாகனத்தை வெளியே அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வாகனத்தில் இருந்தவர் எம்.பி என்று அடையாளம் காணாததால் பாதுகாப்பு அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனால் கோபமடைந்த அர்ச்சுனா எம்.பியும் அவருடன் இருந்த பெண்ணும் அதிகாரியை கத்தி கூச்சலிட்டு மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் இருந்து இறங்கிய அர்ச்சுனா, பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தைப் பிடித்து, நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எந்த இடத்திற்கும் போக தனக்கு உரிமை உண்டு என்று கூறி, அந்த அதிகாரியின் கையடக்க தொலைபேசியை தரையில் அடித்து நொறுக்கியுள்ளார்.
வாகனங்களுக்கு இடையூறு
மற்ற அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

பின்னர் அவர் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் 18ஆவது மாடிக்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், தனது தேவையை நிறைவேற்றி திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது தவறை ஒப்புக்கொண்டு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் சேதமடைந்த கையடக்க தொலைபேசியை சரி செய்ய 1000 ரூபா கொடுத்துவிட்டு விட்டு வெளியேறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 8 மணி நேரம் முன்