தமிழர் பகுதியில் படுதோல்வியில் முடிந்த அநுரவின் இரகசிய டீல்
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் பின் வடக்கு மற்றும் கிழக்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக எண்ணிய அரசு தரப்புக்கு பாரிய அடி விழுந்திருப்பதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் தொடர்ச்சியான எதிர்ப்பார்ப்பாக வடக்கு மற்றும் கிழக்கை எவ்வாறு தன்வசப்படுத்துவது என்பதாகவே காணப்பட்டது.
இதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பாரிய கூட்டங்களை எல்லாம் அவர்கள் முன்னெடுத்த நிலையில், மாகாண சபையிலும் வடக்கு மற்றும் கிழக்கை தன்வசப்படுத்த வேண்டும் என அவர்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனுடன் பலதரப்பட்ட வாக்குறுதிகளையும் வழங்கி இருந்த நிலையில் அவை எவற்றையும் நிறைவேற்றாமை காரணமான இந்த தேர்தலில் அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் களம், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் களம், எதிர்கால அரசியல் மற்றும் நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்ப்பில் அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
