அநுரவின் வாக்கு வேட்டைக்கு மறைமுக திட்டம்! ரணிலை வைத்து காய்நகர்த்தல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து தமது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள அநுர அரசாங்கம் பல நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாக தற்போது வாதப்பிரதிவாதங்கள் வலுத்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த நடைமுறை மக்கள் மத்தியில் தமது அரசியல் பலத்தை நிலைநாட்டவும் எதிர்தரப்புகளை சவாலுக்குட்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த நடைமுறை தற்போது விமர்சிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் தங்கள் பலங்களை இதன் பின்னர் காட்ட முனைப்பு காட்டும் வெளிப்படையை அவதானிக்க முடிகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டமை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் கைது என்ற பதிவை நிலைநாட்டியுள்ளது.
இந்நிலையில் அநுர அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் முடிவு எதனை நோக்கி கொண்டு செல்லும் என்பதையும், இதனால் அரசாங்கத்துக்கு காணப்படும் சாதக - பாதக காய்நகர்த்தல்களையும் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

