சமஷ்டியை எந்த சந்தர்ப்பத்திலும் தரப்போவதில்லை என்றார் அநுர : அரச தரப்பின் விளக்கம்
சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் கூட்டத்தின் போது தெரிவித்தார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) சுட்டிக்காட்டினார்.
யாழில் (Jaffna) நேற்று (26) ஊடக இடம்பெற்ற சந்திப்பின் போது “புதிய அரசியலமைப்புச் சட்டம் தமிழர்களுக்கு நன்மை பயக்குமா“ என்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார்.
தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
எமது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் யாருமே காவல்துறை பாதுகாப்பைக் கோரவில்லை எங்களுக்கு எங்களுடைய மக்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் இன்னமும் தங்களுக்கு பாதுகாப்பு போதாது என்று கூக்குரலிடுகின்றனர்.
15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |