பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்!

Sinhala and Tamil New Year Tamils Hinduism 12 Rasi Palangal Tamil
By Dharu Mar 22, 2023 03:51 PM GMT
Report

தமிழ் புத்தாண்டு சோபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சி இடம்பெறவுள்ளது.

12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் காணப்படும்.

அந்தவகையில் பிறக்கவிருக்கும் புதுவருடம் 12 ராசியில் எந்த ராசியினருக்கு அமோகமான பலன்கள் கிடைக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மேஷ ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

சனி 11ல் இருக்கிறது, சுக்கிரன் 2ல் இருக்கிறது, குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு காணப்படும்.

சூரியன் உச்சம் பெறுவதால் அதிகார உயர்வு சாதகமாக காணப்படும். இது 14 ம் திகதிக்கு பிறகு இடம்பெறும். சுக்கிரன் புதன் சூரியன் ஆகியன ஒன்றாக இணைவதால் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் சாதகமாக காணப்படும்.

முன்னேற்றம் தரக்கூடிய ஒரு மாதம் இதுவாகும். பண வரவு நன்றாக இருக்கும். இலாபம் மற்றும் பொருளாதாரம் சாதகமாக காணப்படுகிறது. குடும்ப வாழ்க்கை நல்லவிதமாக அமையும். திருமண தடை நீங்கும்.

கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு தெளிவு தரும் மாதமாக காணப்படுகிறது.

ரிஷப ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

ஏப்ரல் மாதம் 6ம் திகதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு வருகிறார் . 2ல் செவ்வாய் 11 ல் குரு இருக்கிறார். சனி உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். புதன் 12 ம் வீட்டில் இருப்பதால் புதிதாக வேலைக்கு முயற்சி செய்தால் உடனே அமையாமல் நேரம் தள்ளி அமையும்.

இந்த மாதம் முழுதும் செலவு அதிகமாக இருக்கும். ஏப்ரல் 1ம் திகதி நீங்கள் யாருக்காவது தானம் செய்வது சிறப்பு. இதனால் தோஷம் குறைந்து செலவுகள் நல்லதாக மாறும். திருமண கருத்துகள் சரியாக பொருந்தாமல் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் காணப்படும். முடிந்தளவு அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். குழப்பங்கள் காணப்படும். ஆகவே பொருமையாக இருந்தால் சிறப்பு தரும்.

மிதுன ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

புதன், சுக்கிரன் ,ராகு 11 ம் இடத்திற்கு மாறும்.சுக்கிரன் 12 ல் இருப்பதால் சுப செலவுகள் காணப்படும். இது ஆனந்தமான மனநிலையை கொடுக்கும். ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும். அதாவது ராஜயோகமான வாழ்க்கையை இது குறிக்கும்.

குரு மற்றும் சூரியன் 11 ற்கு வருகிறார் . தொழில் சாதாரணமானதாக காணப்படும். குடும்ப திருமண முயற்சிகள் நல்ல படியாக அனைவரின் ஒப்புதலோடும் இடம்பெரும். வெறுத்தவர்கள் விரும்பும்படியான சூழலாக மாறும். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

ராகுவும் குருவும் சேரும்போது அது நல்ல விதமான யோகம் அது இலாபமாக உங்கள் ராசிக்கு மாறுகிறது. ஆரோக்கியம், வாழ்க்கை அனைத்துமே சுபமாக இருக்கும்.மாணவர்களுக்கு இன்னும் நல்லதாக காணப்படும்.

கடக ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

10 ல் குரு மற்றும் சூரியன் காணப்படுகிறது. சூரியனனானது உச்சம் பெறுகிறது. புதன் 11 ல் உள்ளது. 8 ல் சனி மற்றும் ,12 ல் செவ்வாய் காணப்படுகிறது. தொழில் ரீதியாக பார்த்தால் நீங்கள் எதிர்ப்பார்ப்பது நடைப்பெறும் வாய்ப்புகள் குறைவாக காணப்படும்

இது சாதகமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவாகவும் இருக்கலாம். இந்த மாற்றங்களை ஏற்று நடக்க வேண்டும். சிரமங்களை சமாளிக்க பழக வேண்டும். பொறுமையாக இருங்கள்.வர்த்தகத்தில் நீங்கள் புது முயற்சிகளை மேற்கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.

திருமணம் பற்றி உறுதியாக சொல்ல முடியாது. நூறு வீதம் தெளிவுடன் முடிவுகள் மேற்கொள்ள முடியாது சற்று குழப்பங்கள் காணப்படும். குடும்ப வாழ்க்கை குழப்பமாக காணப்படும். ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்புகள் குறைவு.

மாணவர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளே ஏற்படும். அனைத்து திறமைகள் இருந்தும் சூழ்நிலை பாதிப்பினால் மேற்கொள்ள முடியாது காணப்படும். ஆகையால் சமாளிக்கும் வழிகளை அறிந்து எதிர்ப்பார்ப்புகளை குறைத்து நிம்மதியாக வாழுங்கள்.

சிம்ம ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

ஏப்ரல் மாதம் சிறப்பு ஏனெனில் சூரியன் உச்சம் அடைகிறது. குரு சூரியன் அங்கேயே புதனும் இணைகிறார். 11ம் இடத்தில செவ்வாயும் 10 ல் சுக்கிரனும் இருக்கிறார். சனி ஆட்சி பெற்று இருக்கிறார்.

எல்லா கோள்களும் சாதகமாக இருக்கிறது. ஏப்ரல் 14ம் திகதியில் இருந்து பலன்கள் சிறப்பாக காணப்படுகிறது. நினைத்ததை நிறைவேற்றலாம். ஆரோக்கியம் பொருளாதாரம் சிறப்பாக காணப்படும். திருமணம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கும் முயற்சி நல்ல பலனை தரும்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் மாதம் இது .சிம்ம ராசிக்கு இது சாதகமாகவே இருக்கிறது.

கன்னி ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

8ல் சுக்கிரன் ,10 ல் செவ்வாய், 6 ல் சனி , 8ல் சூரியன் குரு 8 ற்கு மாற்றம் ஆகவே தொழில் ரிதியாக பார்த்தால் அமைதியாக இருந்து வேலைகலை செய்துகொண்டு அமைதியாக போனால் நல்லது.

தேவையற்ற மனக்குழப்பங்கள் 1 அல்லது 2 நாள் ஏற்பட்டாலும் மாறிவிடும். கோபதாபம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அவ்வளவு சாதகமாக இல்லை. 12 மாதங்களில் ஏப்ரல் மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லை.

விட்டுக்கொடுத்து வாழ்வது தேவையற்ற பிரச்சினைகளை தடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை . 8ல் குரு இருப்பதால் வாயு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். அதிக கோபம் மற்றும் கண்களில் எரிச்சல் ,நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்யுங்கள். மாணவர்களுக்கு சற்றே குழப்பமானதாக காணப்படும்.

துலாம் ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

குருவுடைய பார்வை விழுகிறது . சூர்யன் ஆட்சி பெறுகிறார். சுக்கிரன் 8 ம் இடத்தில இருக்கிறார். புதன் 7 ல் இருக்கிறார். முயற்சிகள் 70 வீதம் சாதகமாக அமையும். குருவின் பார்வை இருப்பதனால் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேலை மற்றும் வர்த்தகத்தில் வாய்ப்புகள் காணப்படும். திருமண வாழ்க்கை குழப்பமாக காணப்படும். குழப்பம் இருந்தாலும் தெளிவான சிந்தனையை கொடுக்கும். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாக காணப்படும். மாணவர்களுக்கு சூரியன் மற்றும் குருவின் பார்வை சாதகமாக காணப்படும்.

உங்களது அனுபவம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தருமே ஒழிய உங்கள் அதிர்ஷ்டம் பலன் தராது. ஆகவே சிந்தித்து செயற்படுவது சிறப்பு. ஆரம்பத்தில் தடங்கலாக இருந்தாலும் சாதகமாக இருக்கும். தடங்கலுக்கு பின் வெற்றி அடைவீர்கள்.

விருச்சிக ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

விருச்சி ராசிக்கு செவ்வாய் 8 ம் வீட்டில் சனி 4 யிலும் குரு 6 யிலும் இருக்கிறார்கள். இவை கடன், எதிர்ப்பு, முயற்சி தடைபட்டு போதல் போன்றவையை குறிக்கும். எதையுமே தயங்கி தான் செய்வீர்கள் .சூழ்நிலை சாதகமாக இருக்காது.

ஆனால் சுக்கிரன் உங்களுக்கு சாதகமா இருக்கிறார். கணவன் மனைவி பிரச்சினைகள் குறைவாக காணப்படும். வர்த்தக முயற்சிகள் சற்று தாமதமாகும். 6ம் இடத்தில் குரு ,சனி ,செவ்வாய் ,புதன் காணப்படுகிறார்கள். வேலைத்தளத்தில் தேவையில்லாத விடயங்களில் தலை போடாமல் இருப்பது சிறப்பு. பண விடயங்களில் எச்சரிகையாக இருப்பது நல்லது.

அனைவரையும் அனுசரித்து போக வேண்டும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் தாண்டி வந்துவிட்டால் அது வெற்றி தரும்.

தனுசு ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இது உங்களுக்கு சாதகமானதே. சூரியன் புதன் குரு 5ம் இடத்தில் ராகுவோடு இணைகிறது. இந்த கோள்களின் சேர்க்கை என்ன சொல்கிறதென்றால் நீங்கள் நினைக்கும் வேலை ,உங்கள் தொழில் முன்னேற்றம் என சுபமான காரியங்கள் உங்களுக்கு நடக்கும்.

நீங்கள் நினைத்தது நடக்கும் மற்றும், நினைத்ததை நடாத்துவதற்கும் சிறப்பான மாதம் ஏப்ரல் மாதம் ஆகும். உங்கள் இலக்கை அடைவீர்கள். திருமண தடை நீங்கும். உதவி நிறைய வகையில் கிடைக்கும்.

நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். பதவி அதிகாரம் உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். பரிசு பொருட்கள் கிடைக்கும். பெற்றோர் ஆதரவு இருக்கும். மன அமைதி கிடைக்கும்.

மகர ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

சனி பெயர்ச்சி சாதகமாக காணப்படும். சுக்கிரன் 5ம் இடத்திற்கு தொழில் ரீதியாக சிறப்பாக காணப்படுகிறது. சூரியன் உச்சம் மற்றும் புதன் உச்சம் உங்களுக்கு சாதகமாக காணப்படும். வாழ்க்கை சுவாரசியமாக மாறும். பண வரவு அதிகமாக காணப்படும்.

குடும்பம் மூலமோ நட்பு மூலமோ பண ஆதரவு கிடைக்கும். தள்ளிப்போன விடயங்கள் நடக்கும். 2ல் சனி இருப்பதனால் குடும்ப குழப்பம் மற்றும் ,குடும்ப ஆதரவு சரி சமமாக இருக்கும்.

குடும்ப உறுப்பினருக்கு ஏதோ ஒரு வகையில் கஷ்டம், சுமை ஏற்படும். சூரியன் உச்சத்தில் இருப்பதனால் வேலை சுமை காணப்படும்.மாணவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

கும்ப ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

3ம் இடத்திற்கு சனி மாறுகிறது,சுக்கிரன் 4ம் இடத்தில உள்ளது. புதனும் சூரியன் உச்சம் பெறுகிறது. தொழிலுக்கான கிரகம் செவ்வாய் அது உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. தொழில் சாதாரணமாக உயர்வு என்றும் தாழ்வு என்றும் இல்லாமல் இருக்கும்.

குரு 3ம் இடத்திற்கு செல்வதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் . ஆகையால் பதவி உயர்வு மற்றும் தொழிலில் ஏற்றங்கள் குறைவாகவே காணப்படும். கூடியளவு பொறுமையோடு இருங்கள்.

குடும்ப செலவுகள் ஏற்படும். அதனை சுப செலவுகளாக அர்த்தமுள்ளதாக செலவு செய்யுங்கள். சுகாதார பிரச்சினைகள் ஏற்படாது. சிறியளிவிலான ஆரோக்கிய பிரச்சினைகளே ஏற்படும் அதாவது நெஞ்செரிச்சல் தொண்டை சம்பந்தமான வருத்தங்கள் ஏற்படும்.

திருமண முடிவுகளை சட்டென்று எடுக்க முடியாது சற்றே தாமதமாகும். ஆதரவுகள் குறைவாக காணப்படும். தவிர்க்க முடியாத பண நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே கடன் வாங்குங்கள் இல்லாவிடில் வாங்குவதை தவிர்க்கவும்.

மீன ராசி

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்! | Apirl Rasipalan 2023 Newyear 12 Zodiac Tamil

குரு மாற்றம் உங்களுக்கு நடைப்பெறுகிறது. இது உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. குரு பார்வை 10ம் இடத்தில் இருப்பதால் தொழில் ரீதியான சாதகமான மாற்றங்கள் காணப்படும். 2 ல் குரு என்றால் தன வரவு அதாவது பண அதிகரிப்பு ஏற்படும்.

12 ல் சனி இருப்பதனால் வேலை அதிகமாக காணப்படும். ஆனால் இலாபமும் காணப்படும். வருமான அதிகரிப்பு காணப்படும். உங்கள் திருமணம் சம்பந்தமான முடிவுகள் எடுப்பதற்கு சரியான தருணம் இதுதான்.

திருமண முடிவுகள் தள்ளிப்போனாலும் கண்டிப்பாக நடந்தே தீரும் . சுப நிகழ்வுகள் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரன் கிடைக்கும். பண புழக்கம் இருக்கும். மாணவர்களுக்கு அனைத்தையும் செய்யும் திறன் அமைகிறது.

தான தருமங்கள் செய்வீர்கள். பெண்கள் பொருள், நகை போன்றவைகளை வாங்குவார்கள். குரு 2ம் இடத்தில இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நீங்களே சரி செய்வீர்கள். குருவுடன் புதன் சேருவதால் மன நிறைவு தரும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.   

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023