புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!
நாட்டின் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
புதிய செயலாளர் நியமனம்
அந்த வகையில், ஜி.பி.சபுதந்திரி - பிரதமரின் செயலாளர், டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கே. எம். எம் சிறிவர்தன - நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, ஜே. எம் திலகா ஜயசுந்தர - கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏ. எம். பி. எம். பி அத்தபத்து - புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி - தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா - பாதுகாப்பு அமைச்சு, டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு, பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால - எரிசக்தி அமைச்சு, எஸ். ஆலோக பண்டார - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எஸ். எம் பியதிஸ்ஸ - தொழிலாளர் அமைச்சு மற்றும் ஏ. விமலேந்திரராஜா - வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், டி. பி. விக்கிரமசிங்க - விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கே. எம். ஜி. எஸ். என் களுவெவ - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஏ. எச். எம். யு அருண பண்டார - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, அருணி ரணராஜா - வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/e50607f4-5954-4bec-bedc-ae48896aa22e/24-673c8d63cda8f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/48df8700-eefd-4903-b1fa-8b20c5743760/24-673c8d646cc93.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/665bb1de-a3d5-449f-b63e-f8b715768176/24-673c8d650aa08.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f5139907-e46b-4f48-9e15-63bb8f173c8c/24-673c8d65a6e20.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/028be987-b74c-47c2-b639-ff92db097dcd/24-673c8d6641d07.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a57f55ca-cee7-43b8-9570-4c437aa53423/24-673c8d66db99b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3a7d4dbf-7d95-4d98-998a-5d22f91459d6/24-673c8d677a481.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/23f7380b-f324-49b9-9198-dc90337097f6/24-673c8d681d113.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c2fc50cb-dcc4-4370-b95a-64939ade1def/24-673c8d68b2943.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/dd3c0574-cf34-4b3f-8957-85fd12a389e8/24-673c8d6954788.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/971f59a6-02c4-4675-8ab7-e5d6de38ffb5/24-673c8d69e3cb2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/435462ee-88e9-4db8-a768-f6a5532685e0/24-673c8d6a7d8cf.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d8e3165c-e9c5-42b3-88a7-9d7ace9b2f8d/24-673c8d6b1b35a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f748d9b4-43ee-4c35-91df-aa6d8d6734ca/24-673c8d6bad597.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)