கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் x தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீட்டில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
700 மெகாவோட் சூரிய மின்சக்தி
பசுமையான எதிர்காலத்திற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நிலையான ஆற்றல் தீர்வுகளை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை இந்தத் திட்டம் குறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 500 மெகாவோட் ஆற்றல் சேமிப்பு அமைப்புடனான 700 மெகாவோட் சூரிய மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
Cabinet approval was granted yesterday to enter in to a Power Purchase Agreement with United Solar Group of Australia to invest in a 700 MW Solar Power Project with a 1500 MWh of Battery Energy Storage System.
— Kanchana Wijesekera (@kanchana_wij) December 12, 2023
The Solar power project will be installed on the surface of the…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |