சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுதலை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது..! |
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு 5இல் அமைத்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சமூக ஆர்வலர்களில் ஒருவரான பியத் நிகேஷல நேற்று(26) காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இவர், இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
