மீண்டும் நாடாளுமன்றில் பரபரப்பு : அமைச்சருடன் வாக்குவாதத்தில் குதித்த அர்ச்சுனா
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் (Ramanathan Archchuna) மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் (Ramalingam Chandrasekar) இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சர், ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் உரையாற்றி கொண்டிருந்த நிலையில் இடையில் குறுக்கிட்ட அர்ச்சுனா தனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், “உங்களை போல எல்லாவற்றையும் எடுத்து கொண்டு முகப்புத்தகத்தில் நாங்கள் பதிவிடவில்லை.
உங்களை போலவே நாங்களும் நடந்துக்கொள்ள முற்பட்டால் உங்களுக்கு ஓடி ஒழிய இடம் இருக்காது.
உங்களுடைய அச்சறுத்தலுக்கும் உங்களுடைய மிரட்டலுக்கும் நாங்கள் பயப்படவில்லை.
உங்களுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் அதை எதிரிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் (Sajith Premadasa) கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.
எதிர்க்கட்சியிடம் உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரத்தை கேட்டு பெற்றுக்கொண்டு உங்களுக்கு வேண்டியதை நீங்கள் உரையாடுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |