நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி
"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மது அருந்திய நீதியமைச்சர்
நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார். "அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.

மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |