உலகக் கோப்பையை வசப்படுத்திய ஆர்ஜென்டினா அணிக்கு தாயகத்தில் கோலாகல வரவேற்பு!
உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி, இன்று அதிகாலையில் தனது தாயகமான ஆர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ் நகருக்குச் சென்றடைந்தது.
இதேவேளை, வெற்றியாளர்கள் நாடு திரும்பியதை மக்கள் தெருக்களில் திரண்டு அணிவகுத்துக் கொண்டாடினர்.
அணி தலைவர் லயோனல் மெஸ்ஸி முதலில் விமானத்தில் இருந்து இறங்கி தங்கக் கோப்பையை மேலே உயர்த்தி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
தேசிய விடுமுறை

அதைத் தொடர்ந்து அவரது வெற்றிக் குழு விமான நிலையத்தில் சிவப்பு கம்பளத்தின் மீது அதிகாரிகள் மற்றும் இசைக்குழுவால் வரவேற்கப்பட்டனர்.
டீம் பஸ் விமான நிலையத்தில், தேசிய நிறங்களான நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் கூடியிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் பிரான்ஸிற்கு எதிரான பெனால்டி சூட்அவுட்டில் அவர்கள் பெற்ற பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து அந்நாட்டில் இன்றயதினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
ஆர்ஜென்டினாவின் வெற்றி

2014 உலகக் கோப்பை மற்றும் 2015 மற்றும் 2016 இல் கோபா அமெரிக்கா ஆகிய முக்கிய இறுதிப் போட்டிகளில் மூன்று சமீபத்திய தோல்விகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பெற்ற வெற்றி ஆர்ஜென்டினாவின் வரலாற்றில் இன்றி அமையாததொன்று.
இது தொடர்பாக ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கருத்து தெரிவிக்கையில்,
“ஒரு சரியான ஆட்டத்தில் நாங்கள் இவ்வளவு போராடினோம் என்று என்னால் நம்ப முடியவில்லை.
வரலாற்று தருணம்

ஆனால் இந்த அணி எல்லாவற்றிற்கும் பதிலளித்திருக்கிறது . அவர்களின் ஆட்டத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்,
குறித்த வெற்றியை எம் நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன், இது நம் நாட்டிற்கு ஒரு வரலாற்று தருணம்.”என தெரிவித்துள்ளார்.


More than a million fans stormed the streets of Buenos Aires after Argentina won the World Cup ? pic.twitter.com/2dt1Ko3WC2
— ESPN UK (@ESPNUK) December 20, 2022
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்