சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தவறிய கட்சித் தலைமைகள்
இதுவரை காலமும் சுமந்திரன் (M. A. Sumanthiran) மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க தமிழரசுக் கட்சி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை என கனடாவிலுள்ள (Canada) சுவாமி சங்கரானந்தா (Sankarananda) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்கவில்லை என சுமந்திரன் தெரிவித்த போது அப்போதைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Maavai Senathiraja) அதனை சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து தானே தவிர அது கட்சியின் கருத்து இல்லை என தெரிவித்தார்.
ஒரு கட்சியின் ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து இருக்கலாம் ஆனால் கட்சி அதனை செய்யவில்லை அத்தோடு சம்பந்தனை (R. Sampanthan) பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்த போதும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை, மக்களின் உணர்வை புரிந்து தமிழரசுக் கட்சியும் மத்தியக்குழுவும் கட்டாயம் செயற்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியேத்திரன் உட்பட கட்சியிலுள்ளோர் பதவி விலக காரணம் சுமந்திரன் என்ற தனிப்பட்ட நபரே என யாழின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி செல்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் யாழின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி செல்வின், கனடாவிலுள்ள சுவாமி சங்கரானந்தா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேத்திரன் தெரிவித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |