செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம்

Election Commission of Sri Lanka P Ariyanethran Current Political Scenario
By Shalini Balachandran Oct 21, 2024 11:44 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான் போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன்.

அநுரவின் அரசியல் ஆட்டத்தில் குறுக்கிடும் சர்வதேச நாடுகள் : மீண்டும் அடிவாங்குமா இலங்கை பெருளாதாரம் !

அநுரவின் அரசியல் ஆட்டத்தில் குறுக்கிடும் சர்வதேச நாடுகள் : மீண்டும் அடிவாங்குமா இலங்கை பெருளாதாரம் !

தேர்தல் ஆணைக்குழு

அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் செலவு செய்கின்ற செலவு அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் அறிக்கை செய்யப்பட வேண்டும் என இருந்தது.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம் | Ariyanethran Calculation For Presidential Election

அதன் அடிப்படையிலேயே கடந்த 13 ஆம் திகதிக்கிடையில் அந்த அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.

மூன்று பேர் அந்த செலவறிக்கையை வழங்கவில்லை எனவும், அதில் எனது பெயரும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம்

அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல்

உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு நான் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சைக்கு குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரின் மூலம் எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே கையளித்திருந்தார்.

கடந்த 13 ஆம் திகதி என்பது விடுமுறை தினமாகையால் எனது செலவறிக்கையை ஈமெயில் மூலமாகவும் பக்ஸ் மூலமாகவும் அனுப்பியிருந்தோம்.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம் | Ariyanethran Calculation For Presidential Election

ஆனால் தற்போது பல ஊடகங்களில், சமூக வலைத்தளங்களிலும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நான் அந்த கணக்கறிக்கையை அனுப்பவில்லை என்ற செய்தி தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன அந்த செய்திகளுக்கு நான் முற்றாக மறுப்பைத் தெரிவிக்கின்றேன்.

உண்மையிலேயே அந்த கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் தேதி கையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் யாரும் எதுவித சந்தேகத்தையும் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026