நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் - விடுக்கப்படும் எச்சரிக்கை!
"இலங்கையில் ஹிட்லர் ஆட்சியே நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையும் மோசமாக அதிகரித்துள்ளது.
நாட்டு மக்கள் மீண்டும் ஆயுதம் எந்த வேண்டிய சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது."
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
ஆயுதப்போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"காலி முகத்திடல் போராட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் மாறியது அதிபர் ஒருவர் சென்று இன்னுமொருவர் அதிபராக வந்தமை மட்டுமே.
அதிபராக புதிதாக வந்தவர் மக்களின் கோரிக்கைகளை சரிவர நிறைவேற்றவில்லை. அன்று இருந்த பொருளாதார வீழ்ச்சி இன்றும் காணப்படுகிறது, மாற்றம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை.
மக்கள் பாரிய பொருளாதார பிரச்னைகளுடனேயே குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு மக்கள் நீதி கேட்டால் உங்களை கைது செய்வோம் என அரசு அச்சுறுத்தல் விடுவது நியாயமான செயல் இல்லை.
மீண்டும் நாட்டில் சாதி, இனபேதங்கள் உருவாகி வருகிறது, இதன் மூலம் மீண்டும் ஆயுதம் எந்த வேண்டிய நிலை உருவாகும்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
