ஆயுதப்படையினர் நினைவு தினம் ரணில் தலைமையில்
ஆயுதப் படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு முப்படைகளின் தளபதி அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை மரணித்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் "ஆயுதப்படையினர் நினைவு தினம் - 2023" பிரதான வைபவமும் பொப்பி மலர் தின நிகழ்வும் இன்று (11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக இடம்பெற்றது.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள இராணுவ நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
படங்கள்



