தென்பகுதியில் சிக்கிய ஆயுத களஞ்சியசாலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினரால் தென்பகுதியில் துப்பாக்கிகளும் அவற்றுக்குரிய மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை காவல்துறை பிரிவிலேயே சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இதன்போது, T-56 துப்பாக்கி, T-56 துப்பாக்கிக்கான மகசின், T-56 தோட்டாக்கள்,பிஸ்டல் துப்பாக்கி,அதற்குரிய மகசின், 2.5 mm தோட்டாக்கள், 9 mm தோட்டாக்கள், 02 துப்பாக்கி மாதிரிகள், 03 வாள்கள் மற்றும் 02 கத்திகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்