ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் பதிலடி
ஈரான் வழங்கிய 7 நாட்கள் வேலைத்திட்டப் வரைபடத்திற்கு அமைவாக ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்காக மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக வாஷிங்டன் சில முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகரும் முதன்மைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நேரத்தை வீணடிக்கும் மற்றும் ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை திணிக்கும் காலம் முடிந்துவிட்டது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஈரானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் உறுதியானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபந்தனைகள்
மேலும் தெரிவித்த அவர், இஸ்லாமாபாத் நினைவாட்டுக் குறிப்பின் அடிப்படையில் ஈரான் முன்வைத்துள்ள 7 நிபந்தனைகள் அமெரிக்காவால் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட மாட்டாது என காலிபாஃப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய கடல்வழியாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது உலகளாவிய பிராந்தியப் பதற்றத்தையும் எரிபொருள் சந்தையில் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |