மேலைத்தேய நாடுகளின் ஆயுத விநியோகம் - யுத்தம் தீவிரமடையும் - ரஷ்யா எச்சரிக்கை!
ரஷ்ய படைகளை எதிர்க்கும் திறன் கொண்ட நவீன ஆயுதங்களை மேற்குல நாடுகளிடம் இருந்து எதிர்பார்ப்பதாக உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சில மேலைத்தேய நாடுகளின் சந்திப்பு ஒன்று ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே உக்ரைன் அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
வொலொடிமிர் ஸெலன்ஸ்கி
நவீன ஆயுதங்களின் விநியோகம் தொடர்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து உறுதியான நிலைப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களின் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யா எச்சரிக்கை
இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நடுகளால் உக்ரைன்க்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டால், அது மேலும் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
