விக்கி ஐயா தலைமையில் போட்டியிடும் இராணுவ வீரன்? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!!
நடைபெற்றுவருகின்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஐயா தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டமைப்பில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் போட்டியிடுவதான செய்தி சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி பிரதேசசபைக்கான விக்கி ஐயாவின் வேட்பாளராக போட்டியிடும் மீசாலை வடக்கு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தசாமி சிவகுமார் என்பவர் இராணுவச் சீருடையில் தோற்றமளிப்பதான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விடயம் தொடர்பாக விக்னேஸ்வரன் ஐயாவைத் தொடர்புகொண்டு, “..சூ பேந்தென்ன ஐயா!!.. ஆமிக்காரனையெல்லாம் தேர்தல்ல போட்டிபோ வைக்கிறீங்கள்.. சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஏதாவது புனர்வாழ்வு அளிக்கும் செயற்திட்டமா..??” என்று கேட்டோம்.
‘அந்தப் பொடியன் ஆமி இல்ல.. அவன் முன்னர் 'கடேட்டில்' இருந்தவன்..’ என்று பதில் தந்தார் விக்கி ஐயா.
“..ஆனால் புகைப்படத்தைப் பார்த்தால் கொமாண்டோ ட்ரெயினிங் எடுத்தது மாதிரியெல்லோ இருக்கு..’ என்று கேட்க, வழமைபோலவே மழுப்பிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
தேர்தல் முடிந்ததும் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஆமி சீருடையில் ஒருத்தர் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்து நிற்கின்ற கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கு.



