முல்லைத்தீவு இளைஞனின் கொலை: சிறிலங்கா இராணுவத்தின் பதில்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணத்தில் இலங்கை இராணுவத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என என இராணுவம் மறுத்துள்ளது.
குறித்த இளைஞனை தாக்கி கொலை செய்து சடலத்தை குளத்தில் இட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இராணுவத்தின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு, இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இராணுவத்தினரின் தாக்குதல்
தகவலின்படி, நால்வர் முகாமுக்கு அழைக்கப்பட்டபோது, 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உயிர் தப்ப நால்வரும் பல்வேறு திசைகளில் ஓடியுள்ளனர்.
இதில் ஒருவரான 32 வயதுடைய கபில்ராஜ் காணாமல் போன நிலையில், கிராம மக்கள் நேற்று தேடுதல் மேற்கொண்ட போது, அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் கைது
இவ்வாறானதொரு பின்னணியில் இது குறித்து தென்னிலங்கை ஊடகமொன்று தொடர்பு கொண்ட போது, இராணுவ பேச்சாளர், சம்பவம் முகாமிற்கு வெளியே நடந்ததாகவும், அவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நால்வரும் சட்டவிரோதமாக முகாமுக்குள் நுழைந்ததாகவும், அவர்களில் ஒருவரை கைது செய்து பின்னர் குடும்பத்திடம் ஒப்படைத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை, முத்தையன்கட்டு காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆறு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
