தமிழகம் குன்னூரில் வீழ்ந்து நொறுங்கிய ஹெலிகொப்டரின் இறுதி நிமிடங்கள்! மீட்கப்பட்டது கருப்புப் பெட்டி (காணொளி இணைப்பு)
india
Black box
Army helicopter
By MKkamshan
தமிழகம் குன்னூரில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழக்க காரணமான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் வனப்பகுதியின் மேல் பறந்து செல்லும் ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்