கிளிநொச்சியில் இராணுவத்தினர் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை - மக்கள் எதிர்ப்பு!
Sri Lanka Army
Kilinochchi
By Pakirathan
கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் இன்றையதினம்(24) அளவீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணி அளவீடு செய்யப்பட்ட போது பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள டிப்போ சாந்தி சந்திரன் பூங்காவிற்கு சொந்தமான குறித்த காணி நேற்றும் இராணுவத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
சுவீகரிக்கும் நடவடிக்கை
கிளிநொச்சி நகரத்தின் முக்கிய தேவைகளுக்கு காணிகள் தேவைப்படுகின்ற நிலையில், படையினர் காணியை நீண்ட காலமாக வைத்து வருவதுடன், இதை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி