சர்வதேச சிலம்பப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை அணி
மலேசிய (Malaysia) அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி வெற்றி பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.
சர்வதேச சிலம்பப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி மொத்தம் 11 பதக்கங்களை வெற்றிகொண்டது.
சிலம்பக் கலைக்கு முக்கியத்துவம்
அந்தவகையில் ஒரு தங்கப் பதக்கத்தையும், 4 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டது.
அணியின் வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், பயிற்றுவிப்பாளராக ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளராக என். ஜெகதீஸ்வரனும் அணியை வழிநடத்தினர்.
இவ்வாய்ப்பை முன்னிட்டு, இலங்கையிலும் சிலம்பக் கலைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கை சிலம்பச் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலங்கை சிலம்பச் சம்மேளனத்திற்கு மலேசிய அரசு வழங்கியது
பல நாட்டிலுள்ள சிலம்ப அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு வந்ததற்காகவே இலங்கை சிலம்பச் சம்மேளனத்திற்கு மலேசிய அரசு சிறப்பு அங்கீகாரமாக இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








