அர்ச்சுனா எம்.பியின் கைது தொடர்பில் அரசாங்க தரப்பின் நிலைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையே முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அல்ல என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவில் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உட்பட மூவருக்கு இடையில் கைகலப்பு ஒன்று ஏற்பட்ட நிலையில், அதன்போது நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்படாதமை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக ஊடகவியாளார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சந்திரசேகர் பின்வருமாறு பதில் அளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
