மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு
மத்திய கிழக்கிற்கு சுமார் 2,500 கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரை கொண்ட ஒரு விரைவு பதிலளிப்பு கடற்படை படையணியை அனுப்ப அமெரிக்க திட்டமிட்டடடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படையணி எங்கு தங்க வைக்கப்படும் அல்லது எந்த பணிக்காக பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
தரைவழிப் போர் திறன்
இருப்பினும், இதுபோன்ற படையணிகள் பொதுவாக பெரிய அளவிலான மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மற்றும் கடலில் இருந்து கரைக்கு சென்று தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

image Credit: U.S Navy
மேலும் இந்த படையணியில் தரைவழி போர்திறன் கொண்ட பிரிவு, வான்படை ஆதரவு பிரிவு உள்ளிட்ட பல வகை போர்திறன் கொண்ட அணிகள் இடம்பெறும் என்றும் சில அணிகள் சிறப்பு ரகசிய நடவடிக்கைகளுக்கும் பயிற்சி பெற்றிருக்கின்றதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்ப நிர்வாகத்தின் திட்டம்
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அந்த நாட்டில் தரைவழிப் படைகளை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என்று கூறியிருந்தாலும், அதை முழுமையாக மறுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Credit: Seapower
இந்த படையணி அனுப்பப்படுவது குறித்து முதலில் ஒரு முக்கிய அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |